Description
வில்லி பாரதம் முன்னுரை வில்லிபாரதம் நூலாசிரியர் குறிஞ்சிகாப்பிய அமைப்பு கிருட்டிணன் (கிருஷ்ணர்) தூது முதல் நாள் தூது, இரண்டாம் நாள் தூது, மூன்றாம் நாள் தூது, நான்காம் நாள் தூது, தூதில் இடம் பெறும் பாத்திரங்கள் காப்பியச் சிறப்பு கிளைக் கதைகள், அணி நலன்கள், வருணனை, வில்லிபாரதமும் பிறவும் தமிழ் இலக்கிய வரலாறும் பாரதமும் இராமாயணமும் வில்லிபாரதமும் தொகுப்புரை கேள்வி பதில்கள் இப்பகுதி என்ன சொல்கிறது? பாரதம் என்றால் என்ன என்பதைக் குறிப்பிடுகிறது. தமிழிலக்கியத்தில் பாரத நூல்கள் பற்றிய விளக்கங்களைக் கூறுகின்றது. குறவர்வில்லிபுத்தூரார் பற்றிய வரலாற்றையும், வில்லி பாரதத்தின் கதையமைப்பு, வருணனை பற்றிய விளக்கத்தையும் கூறுகிறது. தனிவாழ்விலும் பொதுநிகழ்வுகளிலும் தூதுவிடுத்தல் பற்றிய குறிப்பினையும் பாண்டவர்கள் சார்பாகக் கிருஷ்ணர் தூது சென்றதன் விளைவு பற்றியும் எடுத்துரைக்கிறது.
வில்லிபாரதம், வியாசர் எழுதிய மகாபாரத நூலைத் தழுவியது. எனினும், மகாபாரதத்தின் முற்பகுதியை மட்டுமே குறவர்வில்லிபுத்தூரார் தமிழில் எழுதியுள்ளார். மிகப் பெரிய நூலான மகாபாரதத்தைச் சுருக்கிப் பத்து பருவங்களில் 4351 பாடல்களில் தந்துள்ளார். வியாச பாரதத்தில் முக்கிய உறுப்புகளில் ஒன்றான பகவத்கீதை வில்லிபாரதத்தில் உள்ளடக்கப்படவில்லை.