Description
என்னுடைய சுயசரிதத்தை நான் எழுத வேண்டும் என்று சில நண்பர்கள் பல நாள்களாக என்னை வற்புறுத்திக் கொண்டே வந்தார்கள். நான் ‘சுய சரிதம்’ என்று எதையும் எழுத நாடப்பட்டேன். ஏனென்றால், ‘சுய சரிதம்’ என்று எழுதுவதற்கு மற்ற மக்களுக்கு வழிகாட்டிகளாக வாழ்ந்து, செயற்கரிய காரியங்களைச் செய்த மகான்களுக்குத்தான் தகும் என்பது என்னுடைய மனப்பழக்கம். உலகத்தின் எந்தப் பகுதியிலும் ‘சுய சரிதம்’ எழுதினவர்களில் அநேகமாக எல்லாரும் அப்படிப்பட்ட அசாதாரண மனிதர்கள்தான்.
“இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த சிறந்த சுயசரிதை நூல்களில் நாமக்கல் கவிஞரின் ‘என் கதை’யும் ஒன்று. இராஜாஜி, ஈ.வெ.ரா. பாரதியார், திரு.வி.க போன்ற சான்றோர் பலரின் நட்பைப் பெற்றிருந்த நாமக்கல் கவிஞர் அரசவைக் கவிஞராகவும், சாகித்திய அகாடமியில் தமிழ்ப் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
‘தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’ என்ற நாமக்கல் கவிஞரின் வரிகளை மறக்கமுடியுமா?