கலீல் கிப்ரானின் ஞானமொழிகள், பவள சங்கரி, (Khalil Gibran Gnanamozhikal, Pavalasankari)

140.00

Description

ஆன்மாவின் கருவிலிருந்து அழகு மிளிர உருவாகும் அற்புத படைப்புகளே கவிதைகள் என்பது! உள்ளமெனும் ஆழ்கடலின் ஊற்றாய் தங்கு தடையின்றி பெருக்கெடுப்பது. ஆம் உள்ளத்து உன்னத உணர்வுகளின் வெளிப்பாடு அது. ஒரு கவிஞரின் முகமூடியற்ற எண்ணவோட்டங்களின் நிறைவடிவம் அவை. நல்லதொரு கவிதை என்பது கால எல்லைகளைக் கடந்தும் ஒளிர்பவை. உயிர்களின் வாழ்வியல் இன்ப துன்பங்கள், சிக்கல்கள், தீர்வுகள், புத்தெழுச்சிகள், பரிதவிப்புகள், பிரச்சனைகள், நன்னெறிகள், நயமிகு சிந்தைகள், அழகியல் வண்ணங்கள், காதல் சின்னங்கள் போன்ற மானுடச் சமுதாய நலம் பாடும் உணர்வுகளை முன் நிறுத்துபவை. அதாவது கவிதைகள் என்பது கவிஞனுடைய ஆன்மாவின் உயிர்ப்பாக மிளிரக்கூடியவை. தேசம், இனம், மொழி போன்ற எதையும் கடக்கும் வல்லமை கொண்டவை. சமுதாய நலனில் அக்கறை கொண்டு, ஏமாற்றுகள், பொய் புரட்டுகள் என அனைத்தையும் வெளிச்சமிட்டுக்காட்டி விழிப்புறச் செய்பவை. கவிதைகள் மானிட மேம்பாடு என்பதை குறிக்கோளாகக் கொள்வதையே தலையாய பணியாய் கருதியிருத்தல் அவசியம். ஒரு கவிஞன் அவலம் நிறைந்த மனித வாழ்வினை முற்றும் உணர்ந்தவனாகவே இருக்கிறான்.
1883இல் பிறந்தவர் கலீல் கிப்ரான். லெபனானிய, அமெரிக்க ஓவியர், தத்துவ ஞானி, கவிஞர் மற்றும் எழுத்தாளர். இக்கவிஞனின் படைப்புகள் 20க்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. உலகின் தலைசிறந்த நகரங்கள் அனைத்திலும் இவன் படைப்புகள் காட்சியாக்கப்பட்டுள்ளன.