கவிதைக் கனவுகள், செல்ல கணபதி (Kavithaik Kanavukal, Sella Ganapathy)

235.00

Description

குழந்தை கவிஞர் செல்லகணபதி
அரிமழம் கழக உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியர் புலவர் ஆறுமுகனார் இவரைக் கவிதை எழுத ஆற்றுப்படுத்தியவர். உயர்நிலைப்பள்ளி மாணவராக இருந்தபோது திருக்குறள் முன்னேற்றக்கழகம் தொடங்கி திருக்குறளைப் பரப்ப முயற்சிகளை முன்னெடுத்தவர்.
அன்றைய நாளில் தமிழகத்தின் மிகச் சிறந்த பேச்சாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த நாவலர் நெடுஞ்செழியனை அரிமழம் கிராமத்திற்கு அழைத்து வந்து திருக்குறளின் மேன்மையைப் பேச வைத்தவர். கவியரசு கண்ணதாசனின் தென்றல் இதழில் ஈற்றடி கொடுத்து எழுத வைக்கும் வெண்பா விருத்தப்பா போட்டிகளில் கலந்து கொண்டு மரபுக் கவிதையின் மாண்பைப் பயின்றவர். இலயோலா கல்லூரி கவிதைப் போட்டியில் முதற்பரிசு பெற்றவர்.
மரபுக்கவிதையில் மனம் கொண்டிருந்த இவரைக் குழந்தைகவிஞர் அழ வள்ளியப்பா அவர்கள் குழந்தைப் பாடல்களின் பக்கம் மடைமாற்றம் செய்ய குழந்தைகளுக்காக மட்டுமே பாடல்கள் எழுதுவது என்ற மன உறுதியைக் கொண்டு குழந்தை இலக்கியம் படைத்து வருபவர்.
இவரது பாப்பா பாட்டு பாடுவோம் புத்தகத்திற்காக குழந்தை எழுத்தாளர் சங்க முதல் பரிசை இவர் பெற்றார். இவர் முதன்முதலாகப் பெற்ற பரிசும் இதுவே. திருப்பூர் தமிழ்ச் சங்கப் பரிசு மற்றும் பாரத ஸ்டேட் வங்கிப் பரிசு என நான்கு முதல் பரிசுகளை இவர் பெற்றிருக்கிறார்.
குழந்தை இலக்கியத்திற்காக தமிழக அரசு பரிசு, நடுவன் அரசின் சாகித்திய பால புரஸ்கார் விருது என பல விருதுகளையும், பரிசுகளையும் பெற்றவர்.
இவரது எண்பதாம் ஆண்டு நிறைவில் இவர் இதுவரை எழுதிய மரபுக்கவிதைகளின் தொகுப்பாக இந்தக் கவிதைக்கனவுகள் நூல் வெளிவருகிறது.