சூரியன் (ஓர் எளிய அறிவியல் நூல்) முனைவர் வ. கந்தசாமி, (Sooriyan, Dr. V. Kandasamy)

Description

பிரபஞ்சத்தில் கோடிக்கணக்கான பால்வெளி மண்டலங்கள், விண்மீன்கள், வால்நட்சத்திரங்கள் என பல அதிசயங்கள் நிறைந்துள்ளன.
சூரியன் போன்ற விண்மீன்களும் பூமி போன்ற ஏராளமான கோள்களும் விண்வெளியில் இறைந்து கிடக்கின்றன. இவை உருவில் மிகப் பெரியவையாக இருந்தாலும் நெடுந்தொலைவில் இருப்பதால் சிறியனவாகவே தெரிகின்றன.
சூரியன் மிகப்பெரிய நட்சத்திரம். இது பூமிக்கு மிகவும் இன்றியமையாதது. உயிரினங்கள் வாழத் தேவையான ஆற்றலை அளித்து வருகிறது. இது பூமியில் இருந்து பல மில்லியன் கி.மீ. தொலைவில் இருப்பதும், பல மடங்கு பெரியது என்பதும் ஆச்சரியம் அளிக்கிறது!
சூரியன் இல்லாமல் உயிரினங்கள் வாழ இயலாது என்றபோதிலும் காலநிலை மாற்றம், ஓசோன் படலத்தில் சேதம் என்பன போன்ற பல பாதகமான விளைவுகளும் ஏற்படுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
இப்படி ஆச்சரியங்கள் மிக்க தீக்கோளத்தைப் பற்றிய உண்மைகளை நாமும் உணர வேண்டாமா! அதன் ஆற்றல் எப்படியெல்லாம் மனித குலத்திற்குப் பயன்படுகிறது என்பதை அறியவேண்டாமா!
எனவே, ஆங்கிலத்தில் பல நூல்கள் இருப்பினும், தமிழக மக்கள் எளிமையாக படித்து உணர்ந்துகொள்ள, அனுபவம் மிக்க பேராசிரியர் முனைவர் திரு. வ. கந்தசாமி அவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட இந்நூல் வாசகர்களுக்கு பெரிதும் பயன் உள்ளதாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.
இந்நூலை வாசகர்கள் வாங்கி, படித்து பயன்பெற வேண்டுகிறோம்.