நவக்கிரகக் கதைகள், நேசா ஆறுமுகம் (Navakiraga Kadaigal, Nesa Arumugam, Thuravi)

115.00

Description

இந்துமத கோவில் மரபின் முக்கிய அங்கமாகவே நவ கிரகங்கள் திகழ்கின்றன. ஆகையால் அவைகளுக்கு இந்தியாவின் பல இடங்களில் கோவில்கள் உள்ளன. பல இடங்களில் உள்ள சனீஸ்வரன் கோவில்கள் மிகவும் பிரபலமானவை. இந்தக் கோவில்களுக்குச் சென்று வழிபடுவது கிரகங்களுக்கு ஏற்புடையதாய் இருக்கிறது. தமிழ்நாட்டில் நவகிரக கோவில்கள் கும்பகோணத்தைச் சுற்றி அமைந்திருக்கின்றன. அவையெல்லாம் சிவன் கோவில்கள். அதிலே கிரகங்களுக்கு தனிக் கோவில்கள் இருக்கின்றன. கோவிலின் ஸ்தல புராணம் அந்தக் கோவிலின் சிக்கலான வரலாற்றுச் செய்திகளையும் தொடர்பு கொண்ட புராணம் குறித்தும் விவரிக்கிறது.
வேறு மாநிலங்களில் நவகிரகங்களுக்கு கோவில்கள் இருந்தாலும் தமிழ்நாட்டில் இருக்கும் கோவில்களே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகக் கருதப்படுகின்றன.
ஒவ்வொரு கிரகத்தும் தனித்தனியே கோவில்கள் கும்பகோணம் நகரைச் சுற்றி அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு கோவில்களின் ஸ்தல புராணங்கள் அங்கே கிரகம் அமைக்கப்பட்டதைக் குறித்த அற்புதமான கதைகளைக் கூறுகின்றன.

சூரியன் – திருமங்கலக்குடி அல்லது சூரியனார் கோவில்
சந்திரன் – திங்களூர்
அங்காரகன் – புற்றிருக்கும் வேலூர் அல்லது வைதீஸ்வரன் கோவில்
புதன் – திருவெண்காடு
பிரகஸ்பதி – ஆலங்குடி
சுக்கிரன் – கஞ்சனூர்
சனி – திருநள்ளார்
ராகு – திருநாகேஸ்வரம்
கேது – கீழ்பெரும்பள்ளம்