இதயச் சுரங்கம் உங்களுடன் ஒரு கணம்… “மோகம் முப்பது வருஷம்”, “ஆசை வெட்கமறியும்” ஆகிய நாவல்கள் வெளியான பிறகு, ஒரு நண்பரிடமிருந்து என்னுடைய ‘புது அலை’ நாவல்களைப் பற்றிய கடிதம் ஒன்று வந்திருந்தது. ‘இவற்றில் என்னதான் புதுமையை நீங்கள் கையாண்டாலும், உங்களுடைய பழைய நாவல்களைப் படிப்பது போல எனக்குத் திருப்தி ஏற்படவில்லை. பழைய மணியனாக உங்களை நான் சந்திக்க முடியுமா?’ என்று அவர் கேட்டிருந்தார். இதைப் போல கடிதங்கள் வேறு நண்பர்கள் சிலரிடமிருந்தும் வந்திருந்தன. ‘அவர்கள் விருப்பப்படியே, […]